இப்பொழுது பங்கு சந்தையில் FUTURE TRADE எவ்வாறு செயல் படுகிறது என்பதை பார்ப்போம்:
பங்கு சந்தையில் FUTURE INDEX அல்லது FUTURE STOCKS , "CONTRACT " என்ற சொல்லிலேயே அழைக்கப்படுகிறது. உதாரணமாக NOV RELIANCE FUTURE என்பதை NOV MONTH RELIANCE CONTRACT என்றும் அழைக்கலாம்.
பங்கு சந்தையில் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும், இவ்வாறு மூன்று மாதங்களுக்கான ஒப்பந்தங்கள் (CONTRACTS ) எல்லா பங்குகளிலும் காணப்படும். ( உம்- RELIANCE STOCK க்கான மூன்று ஒப்பந்தங்கள் - SEP28 , NOV26 , OCT 28 என்று அடுத்த மூன்று மாத ஒப்பந்தங்கள் இருக்கும்)
ஒவ்வொரு மாதத்திற்கான ஒப்பந்தமும், அந்த மாதத்தின் கடைசி வியாழகிழமை அன்று முடிவடையும். ( SEP 28 என்பது, செப்டெம்பர் மாதத்தின் கடைசி வியாழன் 28 ம் தேதி என்று பொருள்)
ஒருவர் காணப்படும் மூன்று ஒப்பந்தங்களில் எந்தொரு ஒப்பந்தத்தில் வேண்டுமானாலும் ஈடுப்படலாம். ( SEP மாதத்தில் இருக்கிறோம் என்று கொள்வோம், ஒருவரால் SEP , OCT , NOV இதில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடலாம்) பொதுவாக நடப்பு மாத ஒப்பந்தமே பங்குசந்தையில் அதிகமாக கையாளப்படும்.
ஒவ்வொரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் முன், கண்டிப்பாக அதற்கான முன்பணம் செலுத்த வேண்டும். பங்குசந்தையில் முன்பணம் என்பது SPAN MARGIN என்று அழைக்கப்படும். ஒவ்வொரு CONTRACT க்கான SPAN MARGIN எவ்வளவு என்பதை NSE தினமும் வெளியிடும்.
இப்பொழுது மறுபடியும் வீட்டிற்கான ஒப்பந்தத்துடன், பங்குசந்தை FUTURE CONTRACT ஐ ஒப்பிட்டு பாருங்கள். ஒப்பந்தம், முன்பணம் மற்றும் ஒப்பந்தத்திற்கான கடைசிநாள் அல்லது காலக்கெடு இவை அனைத்துமே ஒத்துவருவதைக் காணலாம்.
வீட்டிற்கான விலை ஏற்ற இறக்கம் என்பது 2 மாதத்திற்குள் பெரும்பாலும் மாற்றம் இருக்காது, ஆனால் பங்குசந்தையின் சிறப்பம்சமே தினசரி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே.
பங்குசந்தையின் FUTURE TRADE இல் காணப்படும் மிகசிறந்த அம்சம் என்னவெனில், ஒருவரால் எந்தொரு CONTRACT ஐயும் வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.
பங்குசந்தையின் FUTURE TRADE இல் காணப்படும் மிகசிறந்த அம்சம் என்னவெனில், ஒருவரால் எந்தொரு CONTRACT ஐயும் வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.
ஆகவே FUTURE TRADE என்பது இருமுனையிலும் கூர் உள்ள கத்தி போன்றது; எவர் வேண்டுமானாலும் வாங்கி விற்கமுடியும் என்பதற்காக அன்றி, இதை ஒரு கலை போன்று பயில வேண்டும்.
சந்தையில் ஈடுப்படும்முன் சிறந்த முறையில் அடிப்படை கூற்றுகளை அறிந்து கொள்ளல் வேண்டு
No comments:
Post a Comment